Photoshop

அடோபி போட்டோசாப்


அடோபி போட்டோசாப்
Adobe Photoshop CS5 Icon
Photoshopcs5.png
அடோப் போட்டோஷாப் சிஎஸ்5 x64 ன் செயல்பாடு விண்டோஸ் 7 x64ல்
உருவாக்குனர் அடோப் சிஸ்டம்ஸ்
அண்மை வெளியீடு CS6 (13.0 [1]) ஏப்ரல் 23 2012, 456 நாட்களுக்கு முன்னதாக [2]
மொழி சி++[3]
இயக்கு முறைமை குறைந்தபட்சம் விண்டோஸ் எக்ஸ்பி சர்வீஸ் பேக் 3 அல்லது மேக் ஓஎஸ் எக்ஸ் 10.5.8[4][5]
தளம் IA-32 and x86-64
கிடைக்கும் மொழி 27 மொழிகள்
வகை வரைகலை மென்பொருள்
உரிமம் தனியுரிம மென்பொருள்
இணையத்தளம் adobe.com/photoshop
அடோபி போட்டோஷாப் (Adobe Photoshop) அல்லது போட்டோஷாப் என சுருக்கமாக அழைக்கப்படும் வரைகலை மென்பொருளானது அடோப் சிஸ்டம்ஸ் நிறுவனத்தினால் விருத்திசெய்யப்பட்டதாகும். இது வர்த்தக ரீதியாக மிகவும் பிரபலமானது. பல இயங்குதளங்களில் ஆவணங்களை விநியோகிப்பதற்கு உதவும் அடோப் அக்ரோபட் என்னும் மென்பொருளைப் போலவே, இதுவும் மிகவும் பிரபலமான மென்பொருளாகும். இது வர்த்தக ரீதியாக நியம மென்பொருளாகக் கருதப்படுகின்றது. போட்டோஷாப் மென்பொருளானது மைக்ரோசாப்ட் விண்டோஸ், ஆப்பிள் மாக் ஓஎஸ் ஆகிய இயங்குதளங்களில் பயன்படுத்தப்படக்கூடியது. போட்டாஷாப் 9 வரையிலான பதிப்புக்களை குறஸோவர் ஆபிஸ் மென்பொருளூடாக லினக்ஸ் இயங்குதளங்களிலும் பயன்படுத்தலாம். இதன் முந்திய பதிப்புக்களானது சண் சொலாரிஸ் இயங்குதளங்களிலும் சிலிக்கன் கிராபிக்ஸ், ஐரிஸ் இயங்குதளங்களிலும் இயங்கினாலும் இதற்கான அதிகாரப்பூர்வ ஆதரவானது 3ஆம் பதிப்பிலிருந்து கைவிடப்பட்டுள்ளது.

வசதிகள்

இது பிரதானமாக அச்சுவேலைகளிலேயே பயன்படுத்தப்பட்டாலும் உலகளாவிய வலையிலும் பயன்படுத்தப்படுகின்றது. இதன் அண்மைய பதிப்புடன் அடோப் இமேஜ் ரெடி மென்பொருளும் கூட்டிணைக்கப்படுகின்றது. இது விசேடமான கருவிகளையும் கொண்டுள்ளது. அடோப் போட்டோஷாப் சேமிக்கும் *.psd கோப்பானது ஏனைய அடோப் மென்பொருட்களான அடோப் இமேஜ் ரெடி, அடோப் இலஸ்ட்ரேட்டர், அடோப் பிரிமியர், ஆப்டர் எஃபக்ட் மற்றும் நியம டிவிடிக்களை உருவாக்கும் அடோப் என்கோர் டிவிடி போன்ற மென்பொருட்களில் ஏற்றிப் பயன்படுத்த முடியும். இதன்மூலம், தரம் வாய்ந்த டிவிடிக்களை உருவாக்குவதுடன், பின்னணி நிறங்களை மாற்றுதல், பரப்பமைவு (texture) போன்ற சிறப்பு விளைவுகளைத் தொலைக்காட்சி, திரைப்படத்துறை, உலகளாவிய வலையமைப்பு முதலியவற்றுக்காக உருவாக்குவதிலும் பயன்படுகின்றது.
போட்டோஷாப்பானது பல்வேறுபட்ட நிற மாதிரிகளை ஆதரிக்கின்றது.
  • RGB (சிவப்பு - பச்சை - நீல) போன்ற மூலநிறமாதிரிகளை ஆதரித்தல்
  • ஆய்வுகூட நிறமாதிரி
  • CYMK - (சயன்-மஞ்சள்,மஜெண்டா, கறுப்பு) நிறமாதிரி.
  • சாம்பல் (கிரே) நிறமாதிரி
  • பிட்மேப்
  • டியூவோரோன்
மிக அண்மையில் 2009 இல் வெளியிடப்பட்ட அடோப் போட்டோஷாப் 9 போட்டோஷாப் சிஸ் 4' இதில் சிஸ் என்பது அடோப் கிரியேட்டிவ் சுயிட் இருந்து வந்ததாகும். அடோப்பினால் மீள பெயரிடப்பட்ட போட்டாஷாப் -இன் இரண்டாவது பதிப்பாகையினால் 2 என்பது சேர்க்கப்பட்டது.
போட்டோஷாப் பிரபலமான வல்லுனர்களால் பாவிக்கப்பட்டாலும் இது 600 அமெரிக்க டாலர் பெறுமதியாக இருந்தமையினால் பலரும் திருட்டு மென்பொருட்களைப் பாவிக்கத் தொடங்கினர் மற்றும் மேலும் சில போட்டியான மென்பொருட்களை மலிவான விலையில் விற்கத் தொடங்கினர். இதன் காரணமாக அடோப் நிறுவனம், பல சிறப்பு வசதிகள் நீக்கப்பட்ட போட்டோஷாப் எலிமண்ட்ஸ் என்ற மென்பொருளை 100 அமெரிக்க டாலர் பெறுமதியில் வெளியிட்டது.

 எதாவது சந்தேகம் இருந்தால் கீழே உள்ள எண்ணுக்கு தொடர்புகொள்ளவும்

தொடர்புக்கு : 9750387209

No comments:

Post a Comment